அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவுரை.

Published Date: February 14, 2025

CATEGORY: CONSTITUENCY

அரசின் திட்டங்களை பயன்படுத்தி உயர்கல்வியில் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவுரை

 மதுரை தத்தனேரி அருள்தாஸ் புரத்தில் உள்ள மாநகராட்சி திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் அறிவியல் உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்து மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். மேயர் இந்திராணி பொன் வசந்த் வரவேற்றார். மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். 

விழாவில் அமைச்சர் பேசும் போது," கல்வியும் ,சுகாதாரமும் இரு கண்களாக கருதி முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் வழியில் அமைச்சர்கள் பணியாற்றி வருகிறோம். அரசுப் பள்ளிகளுக்கு எண்ணற்ற திட்ட பணிகள் நிறைவேற்றப்படுகின்றது. மாணவர்கள் நலனுக்காக புதுமைப் பெண் ,நான் முதல்வன் என பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் பள்ளிக்கல்வியில் மட்டுமின்றி உயர் கல்வியிலும் சாதனை புரிய வேண்டும்" என்றார்.

இவ்விழாவில் மாநகராட்சி கல்விக் குழு தலைவர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் மகாலட்சுமி, பள்ளித்தலைமை ஆசிரியர் அன்பு செல்வன், தனியார் நிறுவன அதிகாரி கிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கரிமேடு மார்க்கெட் அருகே தொகுதி மேம்பாடு நிதி ரூபாய் 35 லட்சத்தில் கட்டியுள்ள சமுதாயக்கூடத்தினை அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்வின் துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டி செல்வி,மாமன்ற உறுப்பினர் ஜென்னியம்மாள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Media: Dinakaran